• Sep 21 2025

சுசித்ரா ஒரு சைக்கோ; டபுள் கேம் ஆடுறாங்க ..! உண்மையை உடைத்த விஜே வைஷு

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

நாஞ்சை விஜயன் தன்னை காதலித்தார், நாங்க இருவரும் தனிமையில் இருந்தோம்,  இப்போ என்னை விட்டு விலகி விட்டார் என்று  நாஞ்சை விஜயின் மீது புகார் கொடுத்தார் விஜே வைஷு.  இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதன் பின்பு நாஞ்சில் விஜயன் அவருடைய மனைவியுடன் இணைந்து  நீங்க எனக்கு தங்கை மாதிரி.  நல்ல திறமையான பொண்ணு நீங்க.. என்னோட நேரடியாவே பேசி இருக்கலாம்..  நீங்க இப்படி பண்றது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று வீடியோ வெளியிட்டனர். 

இதைத்தொடர்ந்து விஜே வைஷு திடீரென கொடுத்த புகாரை வாபஸ் வாங்கினார். அவருக்கு அழுத்தம் ஏதும் கொடுக்கப்பட்டதா? அல்லது பணத்தைக் கொடுத்து  சமரசம் செய்தார்களா? என்ற  கேள்வி எழுந்தது. 


இந்த நிலையில், பாடகி சுசித்ரா பற்றி  பேசியுள்ளார் விஜே வைஷு. அது மட்டும் இல்லாமல் அவர் அனுப்பிய வாட்ஸ் அப்  மெசேஜையும்  ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் சுசித்ரா பற்றி கூறுகையில்,  நான் பேட்டி கொடுக்கப் போகின்றேன்.. அதில் ஜாய் கிரிஸில்டா பற்றியும் உன்னோட விஷயத்தை பற்றியும் பேச போகின்றேன்.. ஆனால் உனக்கு சாதகமாக பேச முடியாது என சுசித்ரா தெரிவித்துள்ளார்.  ஆனால் சுசித்ரா கொடுத்த பேட்டியில் வைஷுவை பற்றி அவர் அப்பட்டமாக பல விஷயங்களை பேசி இருந்தார்.. 

மேலும், சுசித்ரா ஒரு சைக்கோ.. அவ  உண்மையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவங்க..  அவங்க டபுள் கேம் ஆடுறாங்க..  என்னை வேலையில் இணைத்து விட்டது அவங்க தான்..  ஆனால் இப்போது இப்படி பண்றாங்க.. அவங்களுக்கு கஞ்சா இல்லாம இருக்க முடியாது என்று விஜே வைஷு பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ, 



   

Advertisement

Advertisement