• May 17 2024

''டான்ஸ் வேணுமா சமந்தா மூமென்ட்ஸ் இருக்கு''.. வாரிசுபட வைரல் வசனத்தை பேசி அசத்திய தில் ராஜு..! வைரல் வீடியோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வாரிசு படம் குறித்தும் விஜய்யை குறித்தும் வசனம் ஒன்றை மேடையில் தில் ராஜு பேசினார்.

டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, என வசனம் பேசினார். இதை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தனர்.இதனால் கடுப்பான தில் ராஜு தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இதே போல் பேசினார்.

தமிழில் என்னை இப்படி தான் கலாய்க்கிறார்கள் என்றும் கூறினார்.இந்நிலையில், தற்போது இவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சகுந்தலம்.

இப்படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் வாரிசு படத்தில் விஜய்யை குறிப்பிட்டு பேசியது போலவே சமந்தாவை குறிப்பிட்டு 'டான்ஸ் வேணுமா சமந்தா மூமென்ட்ஸ் இருக்கு' கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. 


Advertisement

Advertisement