• May 17 2024

புர்கா படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் நடிகை மிர்னா…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

’புர்கா’ படத்தின் கதாநாயகிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நயன்தாராவின் ஐரா படத்தின் மூலம் இயக்குநராக பிரபலமானவர் சர்ஜுன். இவரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்

மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடித்துள்ளார். கதாநாயகியாக மிர்னா நடித்துள்ளார்.இருவேறு பின்னணியில் இருக்கும் இருவர் சந்திக்கின்றனர். அதன்பின்னர் படத்தில் என்ன நடக்கிறது என்பது படத்தின் மொத்த கதையாக உள்ளது.

இஸ்லாமிய பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைப்பாளராகவும், பாலமுருகன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் விருதுகளை பெற்றுள்ளது.

எனினும் அந்த வகையில் சமீபத்தில் நியூயார்க் சர்வதேச விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட விழாவில் படத்தில் சிறப்பாக நடித்த நடிகை மிர்னா, சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement