• May 17 2024

100 கோடி சம்பளத்தை தாண்டிய டாப் நடிகர்களின் சம்பள விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஆயிரக்கணக்கில் டேட்டா வாங்கிக் கொண்டிருந்த நடிகர்கள் சினிமாவில் கிடைத்த மக்கள் செல்வாக்கின் காரணத்தால் கோடிகளில் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தில் சென்றிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். எனினும் அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதி வரை பல முன்னணி நடிகர்களை உதாரணமாகச் சொல்லலாம். மேலும், சினிமாவில் ரசிகர்களுக்கு இடையே ஒரு புது ட்ரெண்ட் உருவாக்கியிருக்கிறது

தனது ஹீரோக்களின் படங்களின் ஹிட்டை விட அந்தப் படம் எவ்வளவு கலெக்சன் செய்திருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டு நடிகர்களை கொண்டாடத் தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். எந்த நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை பொறுத்து அவருக்கான இமேஜ் சினிமாவில் உருவாக்கப்படுகின்றது. மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற தகவல் சினிமா வட்டாரத்தில் உலா வருகின்றது. அந்தப் பட்டியல் இதோ,

விஜய்:


தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக தளபதி என்ற அந்தஸ்துடன் கொடிகட்டி பறப்பவர் விஜய். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் வாரி குவித்து இருக்கிறது. எனினும் இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 66 என்ற படத்தில் நடிக்கிறார். மேலும், சம்பளம் பட்டியலில் முதலாவதாக இருப்பவர் விஜய். தற்போது நிலவரப்படி விஜய் ஒரு படத்திற்கு 118 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். அட்லியின் தெறி படத்திற்கு முன்பு இவர் 20 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். 2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இவரின் சம்பளம் கூடிக்கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இவரின் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் வசூலில் பிரச்சனை இல்லை என்பதால் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்:


தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் அஜீத். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த வலிமை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் ஏகே 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், சம்பள பட்டியலில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அஜித். இவருக்கு லைக்கா தயாரிப்பு ஏகே 62 படத்திற்காக 105 கோடி ரூபாய் சம்பளம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் நடிப்பில் வெளியான விசுவாசம், வலிமை ஆகிய படங்கள் தமிழகத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. அதைப்போல் டிஜிட்டல் தளங்களிலும் அஜித்தின் படங்கள் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் வலிமை படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அஜித் அடுத்த படத்தில் 40 கோடி ரூபாய் உயர்த்தி இருக்கிறார். அதோடு சினிமாவில் மட்டுமில்லை சம்பளத்திலும் அஜித்துக்கும் விஜய்க்கும் ஆன போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த்:


கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் அண்ணாத்த. இதனை தொடர்ந்து தலைவர் 169 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அத்தோடு , சம்பள பட்டியலில் விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுக்கு முன்னாடியே 100 கோடி ரூபாய் வசூலை செய்தவர் ரஜனிகந்த். அண்ணாத்த படத்திற்கு இவர் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. மேலும் அந்த இழப்பை ஈடுசெய்ய அண்ணாத்த படத்தை தயாரித்த நிறுவனம் இயக்கும் அடுத்தில் படத்தில் ரஜினி நடிக்கிறார். அதில் 20 கோடி ரூபாய் குறைத்து 80 கோடி ரூபாயாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கமல்ஹாசன்:


உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் கொடி கட்டி பறப்பவர் கமல்ஹாசன். மேலும் இவர் இந்திய சினிமாவின் ஐகான். ஆனால், இவரின் சம்பளம் 35 கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விட்ட நடிகர். ஆனால்,சம்பள விவகாரத்தில் அவர்களை விட பின்தங்கி இருக்கிறார். விஸ்வரூபத்தை தவிர கடந்த 10 ஆண்டுகளாக கமல் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அதுவே அவரின் சம்பளம் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

சூர்யா:


தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் சம்பளம் 28 கோடி ரூபாய் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுவும் ஓடிடி தளத்தில் வெளியான இவரின் படங்கள் எல்லாம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் சூர்யாவின் வியாபாரம் அதிகரித்து வருகின்றது.

சிவகார்த்திகேயன்:


எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். மேலும் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான், தெலுங்கில் ஒரு படம், கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படம் என்று பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தனுஷ்


கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என நடிப்பின் உச்சம் அடைந்து கொண்டிருப்பவர் அசுரன் தனுஷ். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். தனுஷின் சம்பளம் 20 கோடி என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

https://www.youtube.com/embed/1wa4TmDc_70


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

கைதி 2வில் வில்லனாகிறார் சூர்யா…? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Advertisement

Advertisement