• May 16 2024

10 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபு தேவா…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி 66 திரைப்படம் வருகின்ற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமென அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துவிட்டது.

அதுமட்மின்றி தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

எப்போதுமே விஜய்யின் திரைப்படத்தில் அறிமுக பாடல் மிகவும் கலக்கலாக இருக்கும். அதே போன்று இந்த படத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக விஜய், பிரபு தேவாவிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் விஜய்க்கு நெருங்கிய நண்பராக இருக்கும் பிரபுதேவாவும் அவருடைய கோரிக்கையை ஏற்று இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து தர சம்மதித்துள்ளார்.

இதற்கு முன்னதாக விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த ரவுடி ரத்தோர் என்ற திரைப்படத்தில் வந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் ஒரு பெரிய நடிகராக இருந்த போதிலும் விஜய், பிரபுதேவாவுக்காக இந்த விஷயத்தை செய்தார்.

மேலும் அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புறவு இருந்து வருகிறது. அதன் காரணமாகவே பத்து வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா தன்னுடைய பிஸியான வேலைகளிலும் விஜய்யின் கோரிக்கையை ஏற்று இந்த படத்தில் நடனம் அமைத்து தர இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் பிரபுதேவாவும் இந்த படத்தில் இணைய இருப்பதால் விஜய்யின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Advertisement

Advertisement