• May 16 2024

நயன்தாரா - விக்கி திருமணம் பற்றி வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி தற்போது 7 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இதனை நயன்தாராவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் பலரும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

திருப்பதியில் நடைபெறும் அவர்கள் திருமணத்தில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போகிறார்கள் என தெரிகிறது.

திருமணம் திருப்பதியில் நடந்தாலும் அதற்கு பின்னர் சென்னையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர் என்று தெரிகிறது.

அந்த ரிசப்ஷனுக்கு தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்றாலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு மிக நெருக்கமான சமந்தா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கண்டிப்பாக கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement