• Jul 18 2025

"நீ சினிமாவிலிருந்து காணாமல் போய்டுவாய்.." நடிகர் விஷ்ணுவிஷால் பேட்டி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து 'ராட்சசன்', 'முண்டாசுப்பட்டி', 'ஜீவா' போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அவர் தற்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.


சமீபத்தில் ஒரு பேட்டியில் விஷ்ணு விஷால் தனது குடும்பம் அதிலும் குறிப்பாக தந்தையாரை பற்றி ஒரு உணர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார். "அம்மா சினிமா பின்புலம் இல்லாதவர். எனவே என்னிடம் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தார். ஆரம்ப காலத்தில் சில கதைகளை நான் மறுத்த போது அப்பா 'நீ என்ன அமீர் கானா? வருஷத்துக்கு ஒரு படம் மட்டும் நடிக்கிறே... இப்படிச் செஞ்சா நீ சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவேனு திட்டினார்."


ஆனால் இன்று என் வளர்ச்சியைக் கண்டு அவர் பெருமைப்படுகிறார். என்னை நம்புகிறார். அது எனக்கு பெரிய சக்தி," என கூறியுள்ளார் விஷ்ணு விஷால். இந்த உரையாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement