‘ஹனுமான்’ திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தேஜா சஜ்ஜா, இப்போது 'மிராய்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சமீபமாக வெளியாகிய 'மிராய்' ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.
'ஹனுமான்' படம் மூலம் மாஸ் ஹீரோவாக அடையாளம் காணப்பட்ட தேஜா சஜ்ஜா, 'மிராய்' படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்ரெய்லரில் அவர் மிக ஸ்டைலிஷாகவும், வலிமையான கதாபாத்திரத்துடனும் வெளியாகிறார்.
அத்துடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரேயா இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் திரும்பி வருகிறார். ட்ரெய்லரில் அவர் சற்று மர்மமான, ஆனால் முக்கியமான ரோலில் காட்சியளிக்கிறார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!