• Jul 18 2025

நடிகர்களுக்கான நவீன கோட்டை! வெளியானது நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா அப்டேட்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகின் கலாசாரக் கருப்பொருளாகவும் நடிகர்கள், தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் வழிகாட்டும் அமைப்பாகவும் விளங்குவது தான் தென்னிந்திய நடிகர் சங்கம்.பல வருடங்களாக நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டும் திட்டம் தாமதத்துடன் இருந்த நிலையில், தற்போது அந்த கனவு நிறைவடைந்துள்ளது.


சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிட இடத்தில் தற்போது மாடிக் கட்டடம் ஒரு மிகப்பெரிய பணத்துடன் எழுந்து வருகின்றது. இதற்காக நடிகர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொகை திரட்டப்பட்டு, கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


பழைய கட்டிடத்தை இடித்து புதியதாக கட்டும் திட்டம், ஆரம்பத்தில் சில தடைகளால் தாமதமாகி இருந்தது. தற்போது, நவீன அமைப்புகளுடன் இந்தக் கட்டடம் புத்தெழுச்சி பெற்றுள்ளது.  தற்போது இந்த புதிய கட்டிடத் திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. மிக விரைவில் இதற்கான அதிகாரபூர்வ திறப்பு விழாவும் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement