• Aug 05 2025

பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய யாஷிகா ஆனந்த்...!ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வீடியோ..!

Roshika / 19 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இளம் ரசிகர்களிடையே பெரும் பிரபலமான இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் பின்னர், இவர் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மூலம் மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் செயற்பாடாக இருப்பதோடு, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது புகைப்படங்கள், குறிப்பாக இளைய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


இந்நிலையில், தற்போது தனது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோவினை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், யாஷிகா விருந்தினர்களுடன் கேக் வெட்டி, உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரது ஹேப்பி மூட் மற்றும் ஸ்டைலிஷ்  ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


இந்த வீடியோ ரசிகர்களிடையே விரைவாக வைரலாகி வருகிறது. பலரும் கமெண்ட்களில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து, எதிர்காலத்தில் இவர் மேலும் உயர்ந்திட வேண்டும் என பிரார்த்தனை தெரிவித்து வருகின்றனர்.





Advertisement

Advertisement