தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் திறமையான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளவர் நடிகை டாப்சி. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, வலுவான பெண் மையப்படங்களில் நடித்துவரும் அவர், சமீபத்தில் அளித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்பு பயணத்தை அதே உறுதியுடன் தொடர்ந்து வரும் டாப்சி, சமீப காலங்களில் நல்ல கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். கதை முக்கியம், கதாபாத்திரத்தின் வலிமை முக்கியம் என்பதையே தனது முதன்மை அளவுகோலாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதாவது, “பெண்களை குறிப்பிட்ட பார்வையில் மட்டுமே அணுகிறார்கள் என்பதே சினிமாவில் உள்ள முக்கிய சிக்கல். நடிகைகளை கவர்ச்சியாக காட்டவும், பார்க்கவுமே விரும்புறார்கள். இது எந்த வகையான ஈர்ப்பு என்று எனக்குத் தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.
இந்த கூற்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!