தமிழ் திரைப்பட உலகில் புதுமையான கதைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் படம் தான் ‘தத் த்வம் அஸி’. விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

வெளியான சில நிமிடங்களிலேயே இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பிரேம்ஜி அமரன் பணியாற்றி வருகிறார். வழக்கமாக கலகலப்பான, இளைஞர்களை கவரும் இசையால் அறியப்படும் பிரேம் ஜி, இந்த படத்தில் ஒரு மாறுபட்ட இசை அனுபவத்தை வழங்கப் போகிறார் என கூறப்படுகிறது.
Listen News!