• Apr 16 2026

விசில் போடு கோட் சிங்கில் ரெடி! CSK , கோட் சம்மந்தம் இருக்கு!ஏன் தெரியுமா? இன்னைக்குதான்.....

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒட்டுமொத்த தமிழ் நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருப்பது என்றால் அது தளபதி விஜயின் கோட் பட சிங்கில் ரிலீஸ்க்காக என்றே கூறலாம். இவ்வாறு இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் பாடல் பற்றிய புதிய அப்டேட்டை வழங்கி உள்ளார் அர்ச்சனா கல்பதி.


மங்காத்தா , மாநாடு போன்ற திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் கோட் ஆகும். குறித்த படத்தில் மீனாட்ச்சி சௌந்தரி , திரிஷா , சினேகா , லைலா , பிரபு தேவா , பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். 


குறித்த படத்தின் 1 சிங்கிளுக்கான அன்னோன்ஸ்மென்ட் வீடியோ நேற்றைய தினம் வெளியாகி வைரலாகிய நிலையில் இன்று 6 மணியளவில் பாடல் வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி தனது எக்ஸ் தல பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இந்தியாவில் பரபரப்பாக நடைபெறும் IPL தொடரில் இன்றய தினம் CSK அணியின் போட்டி நடைபெற உள்ள நிலையில் மஞ்சள் நிற ஹார்ட் உடன் அர்ச்சனா கல்பதி வெளியிட்டுள்ள போஸ்டர் பல ரசிகர்களிடையே CSK அணிக்கும் கோட் படத்தில் ஒரு பங்கு உள்ளது என்று எதிர்பார்ப்பை ஏற்றப்படுத்தி உள்ளது.

அர்ச்சனா கல்பதியின் பதிவு இதோ  


Advertisement

Advertisement