• Aug 07 2025

இவங்க என்ன இப்டி மாறிட்டாங்க.. ஷாக்கில் மீனா அம்மா.! அதிகரிக்கும் விஜயாவின் ரகளை..!!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனாவுக்கு அம்மா போன் எடுத்து உங்கட வீட்டு வாசலில தான் நிக்கிறேன் வெளியில வா என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே மீனா போய் உள்ள வா என்கிறார். அதுக்கு மீனாவோட அம்மா உங்கட மாமியார் நிப்பா அதுதான் பயமா இருக்கு என்று சொல்லுறார். பின் மீனா தன்ர அம்மாவை வீட்டுக்குள்ள கூட்டிக் கொண்டு போறார்.


இதனை அடுத்து மீனாவோட அம்மா அண்ணாமலையப் பார்த்து வாற வெள்ளிக் கிழமை சீதாவுக்கு தாலி பிரிச்சுக் கோக்கிறாங்க கண்டிப்பா நீங்க வரணும் என்று சொல்லுறார். அதைக் கேட்டவுடனே விஜயா கல்யாணத்தையே சின்னதா முடிச்சவங்க இதை மட்டும் பெரிசாவா பண்ணப் போறாங்க என்கிறார். பின் அண்ணாமலை முத்துவை பார்த்து நீதான் இதையெல்லாம் முன்னுக்கு நின்னு பார்த்துக்கணும் என்று சொல்லுறார்.

இதனை அடுத்து அண்ணாமலை தனக்கு கொஞ்சம் வேலை இருக்கு வரமுடியாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே விஜயா ஏன் வீட்டுக்கு பெரியவள் என்று நான் இருக்கேன் நான் எல்லாம் வரக்கூடாத என்று கேட்கிறார். அதைக் கேட்ட ஸ்ருதி இவங்க திரும்ப அந்நியனா மாறிட்டாங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து முத்து மீனாவை பார்த்து அம்மா இப்புடி எல்லாம் சொல்லுற ஆளே இல்ல அதுதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு என்கிறார். 


இதைத் தொடர்ந்து எல்லாரும் சீதா வீட்ட வெளிக்கிட்டுப் போகிறார்கள். அங்க அருண் முத்துவ பார்த்த உடனே எப்புடி இருக்கீங்க என்று கை கொடுத்துக் கூப்பிடுறார். பின் விஜயா பார்வதி கிட்ட உள்ள போனவுடனே எல்லாத்தையும் வீடியோ எடுக்கணும் என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜயா அங்க எல்லாரோடையும் சந்தோசமா கதைக்கிறதைப் பார்த்த சீதா ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement