• Oct 06 2025

1 like - 1 Slipper.. இது ரொம்ப ரொம்ப ஓவராச்சே..! மீண்டும் விஜயை அசிங்கப்படுத்திய ஓவியா

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது 41 பேர் கூட்ட நெரிசல் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்போது வரையில் மிகப்பெரிய  அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது. 

இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள்,  கர்ப்பிணிகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியது. இந்த  சம்பவம் நடைபெற்ற சில நேரங்களிலேயே நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என போஸ்ட் போட்டார். 

இதைத்தொடர்ந்து விஜயின் ரசிகர்கள், தொண்டர்கள்  ஓவியாவின் பதிவுக்கு  எதிராக தமது கருத்துக்களை முன்வைத்தனர். அது மட்டும் இல்லாமல் ஓவியாவை ஆபாசமாகவும் திட்டினர். அதனையும்  ஓவியா  ஸ்க்ரீன் ஷாட் எடுத்து  இன்ஸ்டா  ஸ்டோரில் பதிவிட்டார். 


இவ்வாறு தொடர்ச்சியாக விஜய்க்கு எதிராக  தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார் ஓவியா.  மேலும் கரூர் சம்பவம் தொடர்பில்  இதுவரை விஜயை கேள்வி கேட்கவில்லை,  அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்யவில்லை என பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா. அதில்  கரூர் சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகின்றன.  விஜயின் அலட்சியத்தால் 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சென்று இன்னும் சந்திக்கவில்லை.  எனவே எல்லோரும் ஒரு காரியத்தைச் செய்வோம் என இறுதியில் ஒரு லைக் ஒரு ஸ்லிப்பர் ஷாட்  என பதிவிட்டுள்ளார். 

அதாவது இவர் மறைமுகமாக ஒரு லைக் என்றால்  ஒரு செருப்பு.   ஆகமொத்தத்தில் அவரை செருப்பால் அடிக்கும் விதத்தில் இந்த பதிவை ஓவியா பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement