• Oct 06 2025

நண்பனை மறக்கவில்லை.. ரோபோ சங்கரின் நினைவாக நாஞ்சில் விஜயன் செய்த உணர்ச்சி மிக்க செயல்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உயிரிழந்தது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் அவரை நேசித்த அனைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தனது நகைச்சுவை மற்றும் நடிப்பு இவையனைத்தும் மக்கள் மனதில் அவரை உண்மையான "ரோபோ சங்கர்" ஆக்கின. அவரது மரணம் ஒரு காலத்தை முடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.


ரோபோ சங்கரின் திடீர் மரணம், பலரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. பல திரைத்துறையினர், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள் என அனைவருமே அவருக்காக கண்ணீர் விட்டனர். ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரின் நினைவுகள் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பறந்தன.

இந்நிலையில் அவரது நெருக்கமான நண்பர் மற்றும் நடிகர் நாஞ்சில் விஜயன்,தனது நண்பர் ரோபோ சங்கரின் புகைப்படத்தை வைத்து ஒரு கலைநயமான ஃப்ரேம் தயாரித்து, அதை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்


இருவரும் பல நிகழ்ச்சிகளில் இணைந்து நடித்துள்ளதுடன் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் போல இருந்துள்ளனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. அத்தகைய கலைஞரை நினைவில் வைத்து நாஞ்சில் விஜயன், அவரது மனைவி ஆகிய இருவரும் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தின், நடுவில் ரோபோ சங்கர் நின்று கொண்டிருப்பது போல கலைப்படையாகவே அந்த ஃப்ரேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைரலான வீடியோ இதோ.!!

Advertisement

Advertisement