தமிழ் தொலைக்காட்சித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று (2025 அக்டோபர் 5) முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்குகிறது. ஆண்டு தோறும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்படுகின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல பிரபலமான சீரியல்கள் மற்றும் தொடர்களின் நேரங்களை விஜய் தொலைக்காட்சியினர் மாற்றியுள்ளனர். இதனால், மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இடம் வழங்குவதற்காக விஜய் டிவி தனது பிரபல சீரியல்களின் ஒளிபரப்பு நேரங்களை மாற்றியுள்ளன. பூங்காற்று திரும்புமா சீரியல் மாலை 6:00 மணி, மகாநதி மாலை 6:30 , சிந்துபைரவி இரவு 7:00 மணி , சின்ன மருமகள் இரவு 7:30 மணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இரவு 8:00 மணி மற்றும் அய்யனார் துணை இரவு 8:30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளன.
பிக்பாஸ் ரசிகர்கள் இந்த மாற்றத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், சீரியல் ரசிகர்கள் தங்களது விருப்பமான தொடர்களின் புதிய நேரங்களுக்கு மாறி பழக இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
Listen News!