• Oct 06 2025

கெட்ட வார்த்தைல திட்டுறாங்க.. பார்த்திபன் சொன்ன அதிர்ச்சி தகவல்

Aathira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம்  என பன்முகம்  பயணித்து வருகிறார் பார்த்திபன்.  இவருடைய இயக்கத்தில் இறுதியாக டீன்ஸ் படம் வெளியாகி இருந்தது.  மேலும் கடந்த முதலாம் தேதி தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் படம் ஒன்றையும் இயக்க உள்ளார்.  மேலும் நான் தான் சிஎம் என்ற படத்தையும் இயக்கி நடிக்கின்றார்.  இது தொடர்பான போஸ்ட்டர் சமீபத்தில் வெளியானது. 

இந்த நிலையில், சமூக வலைத்தள தாக்குதல் பற்றி பார்த்திபன் ஆவேசம் கொண்டு உள்ளார் .  அதாவது மௌனம் என்ற பட விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் படக் குழுவினரை வாழ்த்தியோடு செய்தியாளர்களையும் சந்தித்து பேசியுள்ளார். 


இதன்போது  சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தாக்குதல்கள் நடப்பது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த பார்த்திபன்,  கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்வது கோபம் வர வைக்கின்றது. ஆனால் முகம் இல்லாதவர்களாக இருப்பதால் எதுவும் செய்ய முடியாது. இது போன்ற  பிரச்சனைகளுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் தன்னைப் பற்றிய மரண வதந்தி பற்றி தொடர்பிலும் அவர் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். 


 

Advertisement

Advertisement