தமிழ் சினிமாவின் பல்துறை திறமைசாலியான நடிகர் தனுஷ், சமீபத்தில் தனது இயக்கத்தில் வெளியான “இட்லி கடை” திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நேர்த்திக் கடன் நிறைவேற்றி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில், தனுஷ் நன்றியுடன் பக்தி கலந்த முறையில் வழிபாடுகளும், பின்னர் கிராம மக்களுக்காக விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார். இது அந்த பகுதியில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரவலையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
“இட்லி கடை” திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தனது வாழ்க்கைபோன்ற கதை, நகைச்சுவை ஆகியவைகளால் பாராட்டுப் பெற்றது.
இந்த வெற்றிக்கு நன்றி கூறும் வகையில், தனுஷ் தனது நம்பிக்கையின் அடையாளமாக கருப்பசாமி கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு, கிடா வெட்டி விருந்து வழங்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்களும், கிராம மக்கள் மற்றும் ஊர்வாசிகளும் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!