• Jul 18 2025

பிரபல ஹீரோக்களின் பிழையால்.. பலிகடாவாகிய சித்தார்த்தின் ‘3BHK’! நடந்தது என்ன.?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் மற்றும் சினிமா மொழியால் பெயர் பெற்ற நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘3BHK’ திரைப்படம் தற்போதைய OTT சந்தையில் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. 


நெட்பிளிக்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற ஓடிடி நிறுவனத்துடன் ஆரம்பத்தில் ஒப்பந்தமாகி இருந்த இப்படத்தின் வெளியீடு, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் அதிர்ச்சி மற்றும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.


நெட்பிளிக்ஸ், கடந்த ஆண்டு தொடக்கம் தமிழகத்தில் சில முக்கிய நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டது. ஆனால், சில முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், சித்தார்த்தின் 3BHK படத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், நேரடி தியேட்டர் ரிலீஸ் அல்லது வேறு OTT-க்கு மாற்ற முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 


அத்துடன் இப்படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டதால் படம் ஜூலை 4ம் தேதி தியேட்டரில் ரிலீஸான பிறகு ஹிட்டாகும் என படக்குழு எதிர்பார்க்கின்றது. 

Advertisement

Advertisement