• May 15 2026

‘கருப்பு’ படத்துக்கு இப்படியொரு நிலையா.? ரசிகர்களை கலங்க வைத்த பின்னணி.. நடந்தது என்ன.?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனையால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். தயாரிப்பாளர் S. R.பிரபு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என பைனான்சியர்கள் வலியுறுத்தியதால், படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


இந்த திடீர் பிரச்சனை காரணமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் படக்குழுவும் கடும் மனவேதனையில் இருந்தனர். குறிப்பாக இயக்குநர் RJ பாலாஜி கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பல திரைப்பிரபலங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகள் வெளியிட்டனர். “பல மாத உழைப்புக்கு இப்படியா நடக்க வேண்டும்?” என ரசிகர்களும் வேதனை தெரிவித்தனர்.

நேற்று படம் வெளியாகாததால் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதனால் ரசிகர்கள் மீண்டும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். இன்று காலை 9 மணி முதல் காட்சியை பார்க்க திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

Advertisement

Advertisement