• May 14 2026

சிம்பிளாக இருக்கும் நிகிலா திடீரென இப்படி மாறிட்டாங்களே.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை நிகிலா விமல், தற்போது தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார். குறிப்பாக குடும்ப கதாபாத்திரங்களிலும், கிராமத்து பெண் தோற்றத்திலும் மிகவும் இயல்பாக நடித்துவரும் அவர், ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.


தமிழில் நடிகர் சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிகிலா விமல், தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் ஒருவராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், தற்போது நிகிலா விமல் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அழகிய மற்றும் நேர்த்தியான உடையில் அவர் எடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகின்றன. எளிமையான லுக் மற்றும் ரசிகர்களை கவரும் அவரது ஸ்டைல் மீண்டும் பாராட்டுகளை பெற்று வருகிறது.


இந்த புதிய போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், “நிகிலா விமல் நாளுக்கு நாள் இன்னும் அழகாகி வருகிறார்” என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகின்றன.



Advertisement

Advertisement