• Aug 08 2025

த்ரிஷா கொடுத்த Robo யானை! ஷாக்கில் ரசிகர்கள்… இதெல்லாம் எப்டி தான் ஜோசிக்கிறாங்களோ?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அழகு மற்றும் பண்பு என்பவற்றால் பெரும் மரியாதையை தக்க வைத்திருக்கும் நடிகை த்ரிஷா, தற்போது ஒரு மனதைக் கவரும் ஆன்மிக செயலை செய்துள்ளார். அருப்புக்கோட்டை ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு, "கஜா" என அழைக்கப்படும் பிரமாண்ட இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.


இந்த யானையின் உயரம் சுமார் 3 மீட்டர் , எடை சுமார் 800 கிலோ என்றும் கோவிலின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. த்ரிஷா வழங்கிய கஜா யானை என்பது, பாரம்பரிய யானை வடிவத்தில், முழுமையாக ரோபோடிக் (mechanical) அமைப்பில் உருவாக்கப்பட்டு, மின்சார சக்தியால் இயக்கப்படும் ஒரு கண்கொள்ளா அதிசயம்.


த்ரிஷாவின் இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டும் ஆதரவும் எழுந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும், கலாசார வட்டாரங்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அத்துடன் த்ரிஷா இந்த இயந்திர யானையை கோவிலுக்கு வழங்கும் தருணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. 

Advertisement

Advertisement