• Apr 17 2026

விக்ரமின் ‘சியான் 62’ படத்தின் சூப்பர் அப்டேட்.. அடுத்தடுத்து வரும் ஆச்சரிய தகவல்கள்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான ‘சியான் 62’  படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் தகவல்களை அவ்வப்போது படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக முதல் முறையாக விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் அதே போல பிரபல மலையாள நடிகர் சுராஜ் என்பவர் இந்த படத்தில் இணைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நடிகர் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்பவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பல முன்னணி இயக்குனர்களின் படங்களில், விருது பெற்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணி ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாலா இயக்கிய ’நாச்சியார்’ ராம் இயக்கிய ’தரமணி’ மற்றும் ’பேரன்பு’ மாரி செல்வராஜ் இயக்கிய ’மாமன்னன்’ விஜய் சேதுபதி தயாரித்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’ உள்பட ஒரு சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பு உள்ளார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில ஆச்சரியத்தக்க அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் அந்த அறிவிப்புகள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘சியான் 62’  திரைப்படம் அவருடைய திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement