தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது புதிய அரசியல் கட்சி மாநாட்டில் எடுத்த செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவின் லைக் தரவுகள் சமீபத்தில் வெளியாகி, 38% லைக்குகள் வடமாநில மாநிலங்களிலிருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல அரசியல் விமர்சகர் மரியாதாஸ், தனது YouTube சேனல் மூலம் இந்த விவகாரம் குறித்து வெளியிட்ட புள்ளிவிபரங்கள் ரசிகர்களிடையே பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
இதனால் சிலர் இதனை போலி லைக்குகள்எனக் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
யூடியூப் சேனலில் வெளியிட்ட புள்ளிவிபரங்களை வைத்து, “ஒரு செல்ஃபி வீடியோவுக்கு இப்படிப்பட்ட மிகப்பெரிய லைக்குகள் வருவது சாதாரணமல்ல. இதன் பின்னணி ஆராயப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
வீடியோவை பார்வையிட்ட ரசிகர்கள், விஜயின் புகழ் தென்னிந்தியாவை மட்டுமல்ல, வடமாநிலங்களிலும் பரவி விட்டதால் இதுவே காரணம் என வாதிடுகின்றனர்.
ஆனால் விமர்சகர்கள், இது சமூக வலைதளங்களில் தவறான முன்மாதிரியாக அமைந்துள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
இந்த விவாதம், விஜயின் அரசியல் பயணத்துக்கும் அவரது டிஜிட்டல் பிரசாரத்துக்கும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!