‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படத்தை இயக்கிய விஷால் வெங்கட், தனது அடுத்த முயற்சியாக ‘பாம் (BOMB)’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இவர்களுடன், திறமையான நடிகர்கள் காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இசைப்பிரபஞ்சத்தில் தனி இடம் பிடித்துள்ள டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ராஜ்குமார் மேற்கொண்டு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பு தரம், தொழில்நுட்பம் மற்றும் கதை அனைத்து அம்சங்களும் திரையரங்கில் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, ‘பாம்’ திரைப்படம் 2025 செப்டம்பர் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் விஷால் வெங்கட் கூட்டணியில் உருவான இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரில்லர் படங்களை விரும்புவோருக்கு ‘பாம்’ ஒரு விருந்தாக அமையும் என நம்பப்படுகிறது.
Mark your calendars – BOMB is hitting theatres on 12th September! 🔥 #BombMovie #BombFromSept12 #TamilCinema #Kollywood #VishalVenkat #ImmanMusical #KollywoodReleases #TamilBlockbuster #sudhasukumar #sukumarbalakrishnan pic.twitter.com/5bSUX5O7vK
— Gembrio Pictures (@gembriopictures) August 29, 2025
Listen News!