தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படம், விஜயின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், இறுதி படமாகவும் கருதப்படுகிறது.
சமீபமாக வெளியாகியுள்ள தகவல்களின் படி, விஜய் சினிமாவைத் தவிர்த்து முழுமையாக அரசியலுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதால், ‘ஜனநாயகன்’ அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இப்படம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கியமாக, இத்திரைப்படத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து உள்ளார். அவர் ஒரு போராட்டக்காரராக சிறப்பாக நடித்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைக்கதையின் வழியாக சமுக அரசியல் விடயங்களைத் தளபதி விஜய் மீண்டும் தொடும் இந்தப் படத்தில், புஸ்ஸி ஆனந்தின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றே தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!