• Aug 09 2025

அப்பாவை நினைத்து இப்பவும் அழுவேன்...கிண்டல் பண்ணுவாங்க.! விஜயகாந்த் மகன் ஓபன்டாக்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் மறு வெளியீட்டை முன்னிட்டு நேற்றைய தினம் சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டு விஜயகாந்தை  நினைவு கூர்ந்து இருந்தனர்.


இந்த நிலையில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கண்கலங்க பேசி இருந்தார். அவர் தனது தந்தையை நினைத்து கண்கலங்க பேசிய காட்சிகள்  சமூக வலைத்தள பக்கங்களில் வைரல் ஆகி உள்ளது. 

இதன்போது அவர் பேசுகையில், எங்க அப்பா இறந்து ஒரு வருஷம் ஆயிடுச்சு. இவங்க இன்னும் அழுதுட்டு இருக்காங்கன்னு கிண்டல் பண்ணுறாங்க. இந்த உயிர் இருக்கிற கடைசி செகண்ட் வரை எங்க அப்பாவை நினைத்து நான் அழுதுட்டு தான் இருப்பேன்.


எங்க அப்பாவை நினைத்து தினந்தோறும் நான் அழுவேன். அதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை. எந்த கோழைத்தன்மையும் இல்லை. ஏனென்றால் நான் தோழியை நினைத்து அழுகவில்லை. என்னை தோற்கடித்தவர்களை நினைத்து அழவில்லை. எங்க அப்பாவை நினைத்து தான் அழுகிறேன். நான் அவரை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன் என்று விஜய பிரபாகரன் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.

Advertisement

Advertisement