• Apr 19 2026

'சூது கவ்வும் 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்: தயாரிப்பாளர் புலம்பல்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ’சூது கவ்வும்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ’சூது கவ்வும் 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் தெரிவித்துள்ளார்.

‘சூது கவ்வும்’ முதல் பாகம் எடுக்கும் போது இரண்டாவது பாகத்திற்கான கதையை நலன் குமாரசாமி எழுதி வைத்திருந்தார் என்றும் இரண்டாவது பாகம் எடுக்க இருப்பது விஜய் சேதுபதிக்கு தெரியும் என்று கூறிய சிவி குமார் தற்போது இரண்டாம் பாகம் குறித்த கதை தயாரானவுடன் விஜய் சேதுபதியை பார்த்து பேசிய போது அவர் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டதாக தெரிவித்தார்.

‘சூது கவ்வும்’ படம் ஒரு சிறப்பான மாஸ் படமாக வந்திருக்கிறது, அதை அப்படியே விட்டு விடுங்கள், இரண்டாம் பாகம் தொடர வேண்டாம் என்று விஜய் சேதுபதி கூறியதாகவும் ஆனால் அந்த படத்தின் ஒன்லைன் கதை நன்றாக இருந்ததால் நாங்கள் அந்த படத்தை எடுக்க முயற்சி செய்கிறோம் என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நலன் குமாரசாமி என்னால் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுத முடியாது, ஒன்லைன் ஐடியாவை மட்டும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் வேறு யாரையாவது வைத்து இயக்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அதன் பிறகு தான் இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் மூன்றாம் பாகமும் நிச்சயம் வரும் என்றும் அந்த படத்தை நலன் குமாரசாமி இயக்குவார் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாம் பாகத்திற்கு ’சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும்’ என்று டைட்டில் வைத்துள்ள நிலையில் மூன்றாம் பாகத்திற்கு  ’சூது கவ்வும் தர்மம் வெல்லும்’ என்ற டைட்டில் வைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement