• Jul 18 2025

ரஜினி, அஜித்தை விட.. என் இதயத்தில் விஜய்க்கே சிறப்பிடம்.! – முக்கிய பிரபலம் ஓபன்டாக்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வியப்பூட்டும் மாஸ் படங்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் தயாரித்த 'கபாலி', 'துப்பாக்கி', 'தெறி', 'அசுரன்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளன. தாணு தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக பெரிய நட்சத்திரங்களை, அருமையான கதைகளுடன் இணைத்து வெற்றிப் படங்களை வழங்கி வருகின்றார்.


இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தாணு, தன்னுடைய சினிமா அனுபவங்கள், நடிகர்களுடன் இருக்கும் பணிப்பிணைப்பு மற்றும் தளபதி விஜய் குறித்த தனது உணர்ச்சி மிகுந்த கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

தாணு கூறியது, “நான் எத்தனையோ பெரிய நடிகர்களோட வேலை செய்திருக்கிறேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், தனுஷ் மற்றும் சூர்யா என அனைவரையும் பிடிக்கும். ஆனா, என் மனதுக்கு  நெருக்கமானவர் யாருன்னு கேட்டீங்கன்னா, அது விஜய் மட்டும்தான்.” என்றார்.


இந்த நேர்காணலில் தாணு மேலும், “தளபதி விஜய் ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பற்றி சொன்னது எனக்கு வாழ்க்கை முழுக்க நெகிழ்வாக இருக்குது. அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'தாணு சார் என்ட அப்பாவுக்குப் பிறகு முக்கியமான இடத்தில் இருக்கிறார் என்று சொன்னார். இதுவரை யாரும் இப்படி என்னைப் பற்றி சொல்லி இருக்க மாட்டாங்க. நான் பலரை வைத்து படங்கள் எடுத்திருக்கின்றேன். ஆனா, இப்படிச் சொன்னது விஜய் மட்டும்தான்.” எனவும் தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement