• May 16 2026

விஜய் - சங்கீதா விவாகரத்து? நீதிமன்றத்தில் மனு தாக்கல்.. தீயாய் பரவும் அதிர்ச்சித் தகவல்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் செய்தி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், சட்டரீதியாக பிரிவதற்கான நடவடிக்கையாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியாகியுள்ள தகவல்களின் படி, மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement