• May 16 2026

வீட்டை விட்டு துரத்தப்பட்ட காந்திமதி.. தஞ்சம் கொடுத்த கோமதி.! கோபத்தில் சக்திவேல்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சக்திவேல் காந்திமதியைப் பார்த்து அம்மா என்று சொல்லவே வெட்கமா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட வடிவு கொஞ்சம் பொறுமையா இருங்க வார்த்தையை விடாதீங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து சக்திவேல் காந்திமதியைப் பார்த்து உன்னோட மருமகள் எத்தினை தடவை பிள்ளைக்கு கல்யாணம் நடக்கல என்று சொல்லி கவலைப்பட்டிருக்கிறாள் என்கிறார்.

அதைக் கேட்ட காந்திமதி எதுவுமே கதைக்காமல் அமைதியா இருக்கிறார். பின் சக்திவேல் காந்திமதி கிட்ட இவ்வளவு வேலை செய்த பிறகு உனக்கு இந்த வீட்டில இடம் கிடையாது என்கிறார். அதைக் கேட்ட வடிவு அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க உங்க அண்ணா ஊர்ல இருந்து வரட்டும் அதுக்கப்புறம் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் என்கிறார்.


அதுக்கு சக்திவேல் அண்ணா இப்ப இருந்திருந்தால் இதைவிட மோசமான முடிவு எடுத்திருப்பாரு என்று சொல்லுறார். அதனை அடுத்து காந்திமதியை சக்திவேல் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து விடுறார். அதைப் பார்த்த கோமதி எதுக்காக இப்படி எல்லாம் செய்யுற என்று கோபமாக கேட்கிறார். அதுக்கு சக்திவேல் இது எங்க வீட்டு விஷயம் நீ தேவையில்லாமல் தலையிடாத என்று சொல்லுறார்.

பின் கோமதி காந்தியமதியைப் பார்த்து எங்க வீட்டில வந்து இருக்கச் சொல்லுறார். அதனை அடுத்து பாண்டியன் சரவணனைப் பார்த்து கோமதி அவங்க அம்மாவ வீட்ட கூட்டிக்கொண்டு வந்தது எல்லாம் சரி ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாம் என்கிறார். அதுக்கு சரவணன் அந்த நேரத்தில அம்மாவுக்கு அது தோணியிருக்காது என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement