• May 16 2026

கோட் படத்தில் ட்விஸ்ட் வைத்த வெங்கட் பிரபு... கூடவே இணைந்த 4 செலிப்ரட்டிஸ்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் பெரிதாக காணப்படுகின்றது.

அண்மையில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான கோட் படத்தின் முதலாவது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விசில் போடு என ஆரம்பிக்கும் இந்த பாடல் விஜயின் அரசியல் குறித்து பேசுவதாகவும் கூறப்பட்டது.

தற்போது கோட் படத்திற்காக தளபதி விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாக இருந்தது.


இந்த நிலையில், கோட் படத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு அவர்களும் ஒரு சிறு கேமியா கேரக்டரில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் இதில் கிரிக்கெட் வீரர்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதேவேளை, நடிகை த்ரிஷாவும் ஒரு சிறிய கேரக்டரில் இந்த படத்தில் நடிக்க உள்ளார் எனவும்,  சிவகார்த்திகேயன் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement