• Apr 16 2026

கெட்ட வார்த்தையிலா திட்டுற.. விஜய் ரசிகராக இருந்தாலும் சரியான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமீபத்தில் கூட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கோட்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்கோட்’  படத்தின் சிங்கிள் பாடல் குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த ரசிகர் வெங்கட் பிரபுவிடம்சிங்கிள் பாடல் வெளியாகும் என்று நீங்கள் சொல்லி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் இன்னும் வரவில்லைஎன்று கூறியதோடு ஒரு கெட்ட வார்த்தையில் திட்டி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு விஜய்யின் ரசிகர் என்று கூட பார்க்காமல் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



கோட்படத்தின் சிங்கிள் பாடல் குறித்த தகவலை சொல்லலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் இப்போ இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க, விஜய் அண்ணா ரத்தமேஎன்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கெட்ட வார்த்தையால் திட்டிய அந்த ரசிகரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

நம்முடைய தளபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார், அவரிடம் மரியாதையாக அப்டேட் கேட்க வேண்டும், இப்படி அநாகரிகமாக கேட்பது தவறு என்று அந்த ரசிகருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். மொத்தத்தில் விஜய் ரசிகராக இருந்தாலும் வெங்கட் பிரபு தன்னை கெட்ட வார்த்தையால் திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement