• Apr 17 2026

மீனாவை பிச்சை எடுக்கச் சொல்லி அசிங்கப்படுத்திய வாசுதேவனை அடித்து நொறுக்கி புரட்டி எடுத்த முத்து

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ஸ்ருதி ரூம்க்கு சென்ற மீனா அங்கு ஸ்ருதியின் மாலையில் அவர் அணிந்து இருந்த தங்க செயின் மாட்டி இருப்பதை அவதானித்து எடுக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த வாசுதேவன், மீனா திருடுவதாக திருட்டுப் பழியை போடுகிறார். இதை தொடர்ந்து மீனா அழுது கொண்டே ஓடிப்போய் முத்துவை கட்டிப்பிடிக்கிறார்.

இதன் போது என்ன நடந்தது என கேட்க, இது எல்லாம் ஒரு பொண்ணா? தெருவுல போய் பிச்சை எடுக்கலாம் தானே என எல்லார் முன்னிலையிலும் மீனாவை அசிங்கப்படுத்துக்கிறார் வாசுதேவன்.


முத்து வேணாம் சார் என சொல்லவும், அவர் அடங்கவில்லை, இறுதியாக வாசுதேவனை சரமாரியாக முத்து அடித்து, மீனாவை கூட்டிப் போகிறார்.

இதன்போது அங்கு ஸ்ருதியும், ரவியும் வர, அண்ணாமலை ஸ்ருதியை கூட்டிட்டு வா வீட்ட போவோம் என சொல்ல, நான் வரல என மறுக்கிறார் ஸ்ருதி. இதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

Advertisement

Advertisement