• Sep 21 2025

காடழிந்தாலும் விதை அழியாது.. ரிதம் 25 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வைரமுத்து.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மனதை கொள்ளை கொள்ளும் பாடல்களில் முக்கிய இடம் பிடித்துள்ள படங்களில் ஒன்று ரிதம் (2000). இந்த திரைப்படம் வெளியாகி நேற்று 25 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. என்றும் மறவாத இசை, கவிதை, உணர்வுகள் கலந்த ஒரு இசைத்தொகுப்பு இது. 25 ஆண்டுகள் பூர்த்தியானதைத் தொடர்ந்து படத்தில் பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்கள், தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவில், இந்நிகழ்வை உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்தார்.


அவரது பதிவில், "கால் நூற்றாண்டு கழிந்த பின்னும் ‘ரிதம்’ படப் பாடல்கள் கொண்டாடப்படுவதை புன்னகையோடு பார்க்கிறேன். நல்ல பாடல்கள் தேன் போல கெட்டுப் போவதில்லை... படம் மறந்து போனாலும் பாடல்கள் மறப்பதில்லை... காடழிந்து போனாலும் விதை அழிந்து போவதில்லை." என்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.


2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரிதம்' திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன், கதாநாயகியாக மீனா, முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் ஒவ்வொரு பாடலும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement