தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் 90 ஆம் ஆண்டுகளில் இருந்து இப்போது வரைக்கும் கிட்டத்தட்ட 63 படங்களில் நடித்துள்ளார். இளமை காலத்தில் இவர் மீது க்ரஷ் இல்லாத பெண்களே இல்லை என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகின.
அஜித் நடித்த படங்களை பார்த்து பலர் அவர் மீது ஆசைப்பட்டனர். இவர் போல கணவன் தான் தனக்கு வேண்டும் என்று நினைத்த நடிகைகளும் உண்டு. ஆனாலும் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல நடிகை மகேஸ்வரி அஜித் மீது தனக்கு மிகப்பெரிய காதல் இருந்ததாக மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது அவர் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
அதாவது உல்லாசம் படத்தில் அஜித்துடன் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மகேஸ்வரி. இந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடித்த போது தனக்கு அஜித் மீது மிகப்பெரிய க்ரஷ் இருந்ததாகவும் அவருடன் அடுத்தடுத்த இரண்டு படங்களில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தை இனிமேல் பார்க்க முடியாது என்ற வருத்தத்தில் இருந்துள்ளார் மகேஸ்வரி. அப்போது அஜித் தன்னிடம் வந்து தனக்கு அருகில் இருந்து நீ எனக்கு தங்கை போல.. இந்த அண்ணன் உனக்காக உன் வாழ்க்கையில எப்ப வேணாலும், எந்த உதவிக்கு வேணும் என்றாலும் வருவேன்.. அப்படி என்று சொல்லி உள்ளாராம்.
இதனால் மகேஸ்வரி தன்னுடைய காதலை அஜித்திடம் சொல்வதற்கு முன்பே முடிஞ்சு போச்சு என்று தெரிவித்துள்ளார்.
Listen News!