• Jun 28 2025

நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் !!

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் யதார்த்த கதைகளால் உரிமை குரல் கொடுக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்.அட்டக்கத்தி படம் மூலம் அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த பா.ரஞ்சித் தற்போது தனது உழைப்பாலும் திறமையாலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

Films, YouTube, Ambedkar — Pa Ranjith ...

சமூக பிரச்சனைகள் மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிரான படங்கள் என இயக்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்ததன் மூலம் சமூக அக்கறை கொண்ட ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் புது பரிமானம் எடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

Neelam Productions - YouTube

நீலம் நிறுவனத்தின் மூலம் இது வரை எட்டு திரைப்படங்களை வெளியிட்டிருக்கும் பா.ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பிற்கான அப்டேட் இன்று வெளியாகிறது.அதாவது இன்று மாலை 5 மணியளவில் பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பெஸ்ட் லுக் போஸ்டர் என்பன வெளியாகும் என உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.



Advertisement

Advertisement