• Jun 16 2025

"வேட்டை கருப்பு" இல்லை.. சூர்யா- பாலாஜி பட தலைப்பு இது தான்..

Mathumitha / 9 hours ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சூர்யா நடிப்பில் வெளியாகிய கங்குவா ,ரெட்ரோ திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையாமல் போனது ஆனாலும் சூர்யாவின் மார்க்கெட் குறையவில்லை இவர் தற்போது rj பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இதைவிட லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த படத்தின் தலைப்பு குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது வருகின்ற 20 ஆம் தேதி பாலாஜியின் பிறந்தநாள் அன்று படத்தின் தலைப்புடன் டீசர் வெளியிட தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தலைப்பு "வேட்டை கருப்பு " இல்லை எனவும் "கருப்பு " என வைக்க படக்குழு நினைத்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் சூர்யா வக்கீலாகவும் கடவுளாகவும் நடிக்க இருப்பதாகவும் சிங்கம் படத்தை போன்ற நல்ல ஒரு வரவேற்பை சூர்யாவிற்கு இந்த படம் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement