தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளை கடந்தும் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் நடிகர் தான் அர்ஜுன். இவர் தற்போது ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார். இவர், நடிகர் மற்றும் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர். புதிய தலைமுறை இயக்குனருடன் இணைந்துள்ள அர்ஜுனின் இந்த கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகை அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக அப்பா – மகள் உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், ஆக்சன் மட்டுமின்றி குடும்ப உணர்வுகளையும் பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், ‘கேஜிஎப்’ படங்களின் மூலம் இந்திய சினிமாவில் பெரிய வரவேற்பைப் பெற்ற இசையமைப்பாளர் ரவி பசூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் பின்னணி இசை மற்றும் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ‘பிளாஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இடம்பெற்ற அதிரடி காட்சிகள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் மற்றும் அர்ஜுனின் மாஸ் திரை தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வைரலாகி வருகிறது.
Listen News!