• May 18 2026

கே. ராஜன் இறப்பிற்கு இதுதான் காரணமா? பொலிஸ் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (வயது 85) இறந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராகவும் பணியாற்றிய இவர், தமிழ் சினிமாவில் நீண்ட கால அனுபவம் கொண்ட முக்கியமான நபராக அறியப்பட்டவர்.


குடும்பத்தில் மனைவி நீலாவதி, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பிரபு திரைப்பட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கே. ராஜன் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டை விட்டு விலகி, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தனியாக வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் கார் ஓட்டுநர் தனசேகரன் மட்டுமே இருந்துள்ளார்.

சம்பவ தினத்தில், அவர் தனது ஓட்டுநருடன் வேளச்சேரி நோக்கி காரில் சென்றுள்ளார். பின்னர் அடையாறு மேம்பாலம் அருகே வந்தபோது, காரை நிறுத்துமாறு கூறிய அவர், சிறிது தூரம் நடந்து சென்று வருவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு, திடீரென அவர் அடையாறு ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப கட்ட தகவல்களின்படி, கடன் சுமை, குடும்ப பிரச்சினை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தவறான முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 15 கோடி ரூபாய் வரை கடன் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே அவர் பொது நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடர்ந்து வருகிறது. அவரது மறைவு திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement