• Aug 08 2025

சரத்குமார்- தேவயானி கூட்டணியின் புதிய அத்தியாயம்.! '3BHK' பட ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகள், உளவியல் நுணுக்கங்கள் மற்றும் குடும்ப-சமூக உறவுகளில் புதுப் பார்வையை ஏற்படுத்தும் படைப்புகள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுக்கொள்கின்றன. அப்படியான முயற்சியாகவே தற்போது வெளியிடப்பட்டுள்ள ‘3BHK’ திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குநர் ஸ்ரீ கணேஷ் தனது இயக்கத்தில் உண்மையான வாழ்க்கைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் படைப்புகளை உருவாக்குபவர். “3BHK” திரைப்படமும் அதற்கேற்ப ஒரு படமாகவே உருவாகியுள்ளது.


இப்படத்தில், சரத்குமார் ,தேவயானி , சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்தவகையில், 3BHK படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த ட்ரெய்லர் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement