தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்பட்ட ரவி மோகன் தற்போது தனது திருமண வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டங்களையும் மனவேதனைகளையும் அனுபவித்ததாக அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.
மேலும், “ஆர்த்தி என்னை வலுக்கட்டாயமாகத்தான் திருமணம் செய்தார். தற்பொழுது அவருடைய சொத்து, பணம் எதுவுமே வேண்டாம் என விட்டுவிட்டு வந்தேன். பசங்களுக்காகத்தான் வாழ்கிறேன்” என உருக்கமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ரவி மோகனின் மாமியாரும் ஆர்த்தியின் தாயாருமான சுஜாதா அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,
இது ஏற்கனவே ஒன்றரை வருடத்துக்கு முன்னாடியே நீதிமன்றத்தில இருக்கிற விஷயம். அத்தனை அவதூறுகளும் கோர்ட்ல இருக்கு.

இன்னைக்கு வந்து மேடை போட்டு பேசியிருக்காங்க. அதே விஷயத்தை ஒன்றரை வருடத்துக்கு முன்னாடியே மறைமுகமா நிறைய பொய்யான விஷயங்களா பரப்புனாங்க. இருந்தாலும், இது கோர்ட்ல இருக்கறதுனால நாங்க எந்த விளக்கமும் கொடுக்கல.
அவருக்கு என்ன அழுத்தமோ தெரியல, இன்னைக்கு ரொம்ப எமோஷனலா பேசிருக்காரு. ஆனா நான் அழ மாட்டேன், எமோஷனல் ஆக மாட்டேன். ஏன்னா நான் எந்த தப்பும் பண்ணல. அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் நாங்க பதில் கொடுப்போம்.
ஆனா இப்ப இது நீதிமன்றத்தில இருக்கறதுனால அட்வைஸ் இல்லாம பேசக்கூடாது. கண்டிப்பா ஆதாரத்தோட உங்களை சந்திப்பேன்.
ஒரே ஒரு விஷயம்… ஏன் இதை பெருசா பேசலன்னா, ஒரு 16 வயசு பையன் இன்னைக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுறான். அவன் மனநிலை எப்படி இருக்கும்? எக்ஸாம் எழுதிட்டு வெளிய வரும்போது எவ்வளவு மன உளைச்சலில் இருப்பான் என்று நீங்க யோசிச்சுப் பாருங்க.
அந்த பசங்க பார்க்கக்கூடாததெல்லாம் பார்த்திருக்காங்க, கேட்கக்கூடாததெல்லாம் கேட்டிருக்காங்க. ரொம்ப மன உளைச்சலில் இருக்காங்க. இதுக்கு மேல அவர்களுக்கு மன உளைச்சல் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் கடமை.

அத்தனை பொய்யான அவதூறுகளுக்கும் சம்பந்தப்பட்டவங்க கண்டிப்பா பதில் சொல்லுவாங்க. என் மேல வந்த அவதூறுகளுக்கும் நானும் பதில் சொல்லுவேன்.
‘பசங்களை பார்க்கவே விடல’ன்னு சொல்றது உண்மையில்லை. அது யாராலயுமே பண்ண முடியாது.
‘திருமணமே பிளாக்மெயில் பண்ணிதான் நடந்தது’ன்னு சொல்றாரு. 2008லேயே ஒரு விகடன் பேட்டியில யார் கை அறுத்துக்கிட்டு கல்யாணம் கேட்டாங்கன்னு வந்திருக்கு. அதையும் நான் தேடி எடுத்து காட்டுவேன்.
‘இனிமேல் நடிக்க மாட்டேன்’ன்னு சொல்றது அவரோட இஷ்டம். இத்தனை வருடமா இல்லாத ஒரு முடிவு எடுத்திருக்கார்னா, அது எங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல.
‘நான் சம்பாதிக்கிற காசை கூட செலவழிக்க விடல’ன்னு சொல்றது ஏற்கனவே கோர்ட்ல சொல்லப்பட்ட குற்றச்சாட்டு. கல்யாணம் ஆன பிறகு ‘உன் அக்கவுண்ட், என் அக்கவுண்ட்’ன்னு தனியா பார்க்க முடியுமா? குடும்பம்னா எல்லாமே ஒன்னுதான்.
‘மாதம் 25 ஆயிரம் மருத்துவ செலவுக்கு அனுப்பினேன்’ன்னு சொல்றாரு. அப்படி நடந்திருந்தாலும், ஒரு மாப்பிள்ளையா அது அவரோட கடமைதான்.
எங்க இன்னொரு மருமகனை கூட்டிக்கிட்டு வந்து ‘அவரும் அந்த குடும்பத்திலிருந்து தப்பிச்சு வந்தாரு’ன்னு சொல்றாங்க. ஆனா அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையோட குடும்பமா இருக்கார். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பாதிக்க விரும்பல.
இரண்டு வருடமா நாங்க எதுவுமே பேசல. இப்ப ‘சைபர் தாக்குதல் காரணமா குடும்பம் பிரிந்தது’ன்னு சொல்றாங்க. அதனாலதான் சைபர் கிரைம்ல புகார் கொடுக்கப் போறோம்.
‘மூன்றெழுத்து நடிகை’ன்னு சொல்லி சில நடிகைகளை குறிவைக்கிறாங்க. தமிழ்நாட்டுல ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடந்தா எல்லா பெண்களும் சப்போர்ட் பண்ணுவாங்க. அதுதான் இங்க கலாசாரம்.
எங்களுக்கு சட்டத்தின் மேல் நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா சட்டம் தன் கடமையை செய்யும். இன்று ரவி மோகன் பேசியது எல்லாமே ஏற்கனவே நீதிமன்றத்தில சொல்லப்பட்ட விஷயங்கள்தான். அதற்கு நீதிமன்றத்திலேயே பதில் சொல்வோம்” என பேசியுள்ளார்.
Listen News!