தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் இருக்கும் நட்பு, போட்டி மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஒரு நடிகரே இன்னொரு நடிகரை பற்றி கூறும் கருத்துக்கள் வைரலாக காணப்படுகின்றன.
இந்த நிலையில், நடிகர் சூரியும் நானும் ஒன்றாகவே கஷ்டப்பட்டு சினிமாவில் பல வாய்ப்புகளைத் தேடி, ஒரே ரூமில் இருந்து ஒன்றாக சாப்பிட்டு வளந்தோம். ஆனால் இன்று சூரி உயர்ந்த இடத்திற்கு சென்றதும் எங்களை மறந்து விட்டார் என நடிகர் கொட்டாச்சி பரபரப்பு குற்றச்சாற்றை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில்,
வடிவேலு எவ்வளவு பேரை வளர்த்து விட்டிருக்காரு. அவர்கூட நடித்த பலருக்கு வேலை கிடைச்சது. அவரு ஒரு படம் பண்ணா 10 பேர், 20 பேர் சம்பளம் வாங்கி வாழ்ந்தாங்க. அப்படி இருக்கும்போது அவர்மேல் குற்றச்சாட்டு வைக்கிறாங்க..

சினிமாவுல கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி அலைந்த காலத்துல நண்பர்கள்தான் இருந்தாங்க. சாப்பாடு இல்லாத நேரத்துல கூட ரெண்டு பேரா பகிர்ந்து சாப்பிட்டிருக்கோம். ஆனா ஒருத்தர் அடுத்த கட்டத்துக்கு போன பிறகு, நண்பனாக இருந்தவனை கூட மதிக்கணும் என சூரி பற்றி வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், நான் சமீபத்துல எடுத்த படத்துக்கு ஒரு சின்ன புரமோஷன் கேட்டேன். ‘பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணி கொடு, டீசராவது வெளியிடு’ன்னு கேட்டேன். ஆனா ‘நான் பண்ணினா மற்றவர்கள் கேட்பாங்க’ன்னு சொல்லி தவிர்த்துட்டாங்க. ‘வாய்ஸ் மெசேஜாவது கொடு’ன்னு கேட்டேன், அதுவும் கிடைக்கல.
அதேவேளை, விஜய் சேதுபதி அண்ணா எத்தனையோ சின்ன கலைஞர்களுக்கு ஆதரவு தர்றார். பிறந்தநாள் முதல் சிறிய விழாக்கள் வரை வாழ்த்து சொல்லி ஊக்கப்படுத்துறார்.
என் பொண்ணு இப்ப கதாநாயகியா நடிக்கிறாங்க. நான் எடுக்குற கதைகளை முதல்ல அவங்களுக்குத்தான் சொல்வேன். என்னோட ஷார்ட் ஃபிலிம், கதைகள் எல்லாத்துக்கும் அவங்கதான் முதல் விமர்சகர். இந்த படத்துக்கும் அவங்க பெரிய ஆதரவு கொடுத்தாங்க.
மேலும், நாங்க எல்லாம் ஒரே ரூம்ல தங்கி சினிமா வாய்ப்பு தேடி அலைந்தவங்க. அப்போ ‘பருத்திவீரன்’ படம் எங்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அந்த மாதிரி தமிழ் சினிமாவுக்கு அடையாளமா நிற்கும் படமா இந்த ‘பூ காய் கனி’ படம் இருக்கும்.
இறுதியாக, என் மகளுக்கு இந்த படம் ஒரு பெரிய அவார்டு வாங்கி தரும். சமீபத்தில் விஜய் சாரையும், ராஜ்மோகன் சாரையும் சந்தித்தப்போ கூட ‘இந்த வருஷம் உங்க பொண்ணு அவார்டு வாங்குவாங்க பாருங்க’ன்னு சொன்னாங்க என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
Listen News!