தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் திரிஷா கிருஷ்ணன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு, கடவுள் நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், பல சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தற்போது பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்,
“கண்ணுகளா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா... முதல்ல இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மே 14-ம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண முடியல... என்ன பண்றதுன்னே தெரியல... ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. ஆனா நீங்க எல்லா திசையில இருந்தும் அனுப்புன ட்வீட்ஸ், வாய்ஸ் மெசேஜ்ஸ், போன் கால்ஸ் எல்லாமே எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்துச்சு.
இந்த அன்புக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னே தெரியல. ‘கருப்பு’ படத்துக்கு நீங்க கொடுத்திருக்கிற மரியாதைக்கும் வரவேற்புக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. என் அன்பான ரசிகர்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். ‘கருப்பு’ படத்தை இவ்வளவு ஸ்பெஷலா மாத்துனது நீங்கதான்” என்று பேசியுள்ளார்.
தற்போது சூர்யாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Karuppu
To all cinema lovers & my #AnbaanaFans
Thank You 🙏🏾 pic.twitter.com/bxWJQ4WBoC
Listen News!