மலையாள நடிகர் திலீப் தொடர்பான வழக்கு மற்றும் அவரது விடுதலையை பற்றி, முன்னாள் நடிகை பாவனா தனது உணர்வுகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இந்த வழக்கு பல வருடங்களாக திரையுலகில் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

பாவனா முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டு, வழக்கின் நெருக்கடியான பயணம், நீதிமன்ற நடவடிக்கைகள், அவரது மனக் கசப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பாவனா பதிவில், “8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாட்களுக்குப் பிறகு, மிக நீண்ட மற்றும் வேதனையான பயணத்தின் முடிவில் ஒரு சிறிய ஒளியை நான் இறுதியாகக் கண்டிருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளார்கள் அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!! எனது வலியை பொய் என்றும், இந்த வழக்கை ஒரு கற்பனை கதை என்றும் அழைத்தவர்களுக்கு இந்த தருணத்தை சமர்ப்பிக்கிறேன். இன்று நீங்கள் கொஞ்சம் மனசமாதானத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருந்தார்.

பாவனா குறிப்பிட்டுள்ளபடி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் Accused no 1 என்பவர் அவரது தனிப்பட்ட கார் ஓட்டுநர் அல்ல. அவர் 2016 ஆம் ஆண்டு பாவனா பணிபுரிந்த ஒரு படத்திற்கு மட்டும் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒருவரே, மற்றும் வழக்கு சம்பந்தமான நாளில் அவரை பாவனா ஒருபோதும் சந்திக்கவில்லை. இது தொடர்பான தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவது குறித்து பாவனா தெளிவாகக் கூறியுள்ளார்.
பாவனா தொடர்ந்து கூறியதாவது, இந்த வழக்கின் முடிவை பலர் ஆச்சரியமாகக் கொண்டாலும், தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை. 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஏதோ சரியில்லை என்ற உணர்வு உருவானது. வழக்கின் நடத்தை, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு வரும் போது, அரசு தரப்பில் கூட மாற்றங்களை கவனித்தது.
“பல வருடங்களாக, நான் உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் பலமுறை அணுகி, இந்த நீதிமன்றத்தை நான் நம்பவில்லை என்று தெளிவாகக் கூறினேன். இந்த வழக்கை ஒரே நீதிபதியிடமிருந்து மாற்றுவதற்கான ஒவ்வொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.”

பாவனா தனது பதிவில் கூறியதாவது, பல வருட வலி, கண்ணீர், மற்றும் உணர்ச்சி போராட்டத்திற்குப் பிறகு, “இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை” என்ற வேதனையான உணர்வை அவர் அடைந்துள்ளார்.
இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மனித தீர்ப்பு எவ்வளவு வலுவான முடிவுகளை வடிவமைக்க முடியும் என்பதையும், ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாக செயல்படாது என்பதையும் பாவனா உணர்ந்துள்ளார்.
“இறுதியில், மனித தீர்ப்பு எவ்வளவு வலுவாக முடிவுகளை வடிவமைக்க முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாக செயல்படாது என்பதையும் நான் அறிவேன்! இந்த நீண்ட பயணம் முழுவதும் என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!!” எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!