• Apr 16 2026

சூரிய நமஸ்காரம் பண்ணிக்கோங்க.. அனைவருக்கும் முன்னுதாரமான பிரபுதேவா, வடிவேலு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு தேவா,  வடிவேலு கூட்டணியில் வெளியான காமெடிகள் மறக்க முடியாதவை.  லவ் பேர்ட்ஸ், ராசையா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களில் இவர்களுடைய காமெடி மக்களால் கொண்டாடப்பட்டது.

சமீபத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா, வடிவேலு இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்கள்.  இந்த அந்த படத்தை  ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


மேலும் ஐ லவ் யூ நண்பா என்று பிரபுதேவாவை பார்த்து வடிவேலு கூறிய வீடியோ ஒன்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டானது.  அதற்கு பிரண்ட்ஷிப் என கேப்ஷனும் கொடுத்திருந்தார் பிரபுதேவா.


இந்த நிலையில்,  பிரபு தேவா, வடிவேலின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் இருவரும் சூரிய நமஸ்காரம் பண்ணுகின்றார்கள். இந்த வீடியோ பார்ப்பதற்கு அமைதியாகவும் ஆசீர்வாதத்துடனும் இருப்பதாக ரசிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement