• Apr 17 2026

‘அகண்டா 2’ படத்தை பார்க்கவுள்ளார் பிரதமர் மோடி.. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமான ‘அகண்டா 2’, வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறி வருகிறது. 


இந்த நிலையில், இப்படத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்க்கவுள்ளதாக, படத்தின் இயக்குநர் போயபட்டி சீனு தகவல் வெளியிட்டுள்ளது, சினிமா உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

" ‘அகண்டா 2’ படம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்." என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான உடனே,சமூக வலைத்தளங்களில் “ஒரு தெலுங்கு திரைப்படத்தை பிரதமர் பார்ப்பது என்பது பெரிய அங்கீகாரம்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலகிருஷ்ணா ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்களும் இதை பெருமையாகக் கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

Advertisement