• Apr 22 2026

1993ல் தொடங்கிய நட்பு…! இந்தக் கதை கட்டப்பாவுக்கு தெரியுமா.? சிபிராஜின் உருக்கமான பதிவு

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு பல பிரபலங்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில், சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் நடிகர் விஜய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவருடைய பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதன்படி, 1993ஆம் ஆண்டு ஒரு குடும்ப நிகழ்ச்சியில் விஜயை முதன்முறையாக சந்தித்த நினைவுகளை சிபிராஜ் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.


அப்போது விஜய் மிகவும் எளிமையான அன்பான மனிதராக இருந்ததாகவும், அந்த இளைஞன் பின்னாளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வெல்லும் பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்று அப்போது கொஞ்சமும் நினைத்ததில்லை என்று சிபிராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.

அதன்படி அவருடைய பதிவில்,  "எதிர்காலத்தில் என்னையும் சேர்த்து லட்சக்கணக்கான இதயங்களை வெல்வீர்கள் என்று நினைக்கவில்லை. ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக, நண்பனாக உங்களின் புதிய பாதையை தேர்ந்தெடுக்கும் முடிவை மதிக்கிறேன். உங்கள் வெற்றிகளை என்னுடையதாகவே கொண்டாடியிருக்கிறேன். வென்று வா தலைவா… நாங்க இருக்கோம்.." என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன், விஜய் தன் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும், தன் மனைவியுடன் முதல் டேட்டுக்கு சென்றதும் விஜய் படம் பார்த்ததுதான் என்றும் சிபிராஜ் இனிமையாக நினைவுகூர்ந்துள்ளார். விஜய் எப்போதும் அழைத்தாலோ மெசேஜ் செய்தாலோ உடனே பதில் தருவார் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா திமுக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பிரச்சாரத்தில் கலந்துகொண்ட திவ்யா, TVK கட்சி உறுப்பினர்கள் தன்னை தாக்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் இரு வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் காணப்படுவதால், இது தொடர்பில் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ''சத்யராஜ் இந்த பதிவை பார்த்தால் என்ன நடக்குமோ?" என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement