தமிழ் சினிமாவில் சிறந்த திரைக் கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து வருகிறார்.
இவரின் அறிமுகப் படமான பருத்திவீரன் மூலம் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், அதன் பின்னர் பல்வேறு வகை கதைகளில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், ஆக்ஷன், குடும்பம், உணர்ச்சி, சமூக கருத்து என பல கோணங்களில் கதைகளை தேர்வு செய்வது கார்த்தியின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான வா வாத்தியார் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது சர்தார் 2, மார்ஷல், கைதி 2 போன்ற பெரிய படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் கார்த்தி மீண்டும் வெற்றி இயக்குநர் பாண்டிராஜுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய படத்தை சூர்யா தயாரிக்க உள்ளதாகவும், தற்போது கதை விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
Listen News!